Mobile

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகமானது ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!

ரெட்மி நிறுவனம் ரெட்மி 9 ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இது 720×1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது .

மேலும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36எஸ்ஒசி சப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகமானது ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி செகன்டரி லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.16,200 விலையில் அறிமுகமானது ஹானர் பிளே 4 டி புரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நம்பர் 1 இடத்தினை எட்டிப்பிடிக்க ஜியோவின் அதிரடி சலுகைகள்!

TechNews Tamil

அறிமுகமாகிறது ஹூவாய் மேட் 30 மற்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ!!

TechNews Tamil