ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 2 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.
மேலும் மெமரியினைப் பொறுத்தவரை, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என மெமரி வகைகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. சென்சார், 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. சென்சார் கொண்டு இயங்குவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.