ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போ ஓப்போ கே5 சீனாவில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வெளியாகியுள்ளது.
- 6ஜிபி/128 ஜிபி சேமிப்பு கொண்ட கே5 விலை – ரூ. 18,900
- 8ஜிபி /128 ஜிபி சேமிப்பு கொண்ட கே5 விலை – ரூ. 20,900
- 8ஜிபி/256 ஜிபி சேமிப்பு கொண்ட கே5 விலை – ரூ. 24,900
இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 17ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

ஓப்போ கே5 6.4 இன்ச் ஃபுல் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2340×1080 பிக்சல்களினைக் கொண்டுள்ளது. அதனுடன் ஏ.எம்.ஓ.எல்.இ.டி திரையும் உள்ளது.
இதில் உள்ள இன்-டிஸ்பிளே சிறப்பான அம்சமாக உள்ளது, மேலும் இது குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 730ஜி கொண்டதாக உள்ளது.
30 வாட்ஸ் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் அமைப்பு, ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்றவையும் இதில் அடக்கம்.
ஆண்ராய்ட் 9 பை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவைப் பொறுத்தவரை 64எம்.பி குவாட் கேமரா செட் அப்பினைக் கொண்டுள்ளது, அது கூடுதல் வரவேற்பினை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்றுள்ளது. இதன் பேட்டரி சேமிப்புத்திறன் அளவு 3,920mAh ஆகும்.