Mi A3 ஸ்மார்ட்போன், ஆகஸ்ட் 23 அன்று விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன், மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி பிராசஸர், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியது. 4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் 15,999 ரூபாய் என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல்கட்ட அறிமுகம் மற்றும் விற்பனை நடந்தாலும், இதன் முழு விற்பனை ஆகஸ்ட் 27 அன்று துவங்கவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாவதற்கு முன்னவே, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இதனால் இதன் அடுத்த விற்பனையில் அதிக அளவிலான் ஆஃபர்களை எதிர்நோக்கி அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர்.