Mobile

சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாகும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன்!

நோக்கியா மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது ஒரு “Daring” ஆன ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. வெளியான தகவலானது, அடுத்து வெளியாகப்போவது நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. 


சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ள நோக்கியா 7.2 ஆனது 6 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 1.84GHz frequency உடனான Qualcomm octa-core ப்ராசஸரை கொண்டுள்ளது. இது Android 9.0 Pie இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் என்பதையும் உறுதி செய்துள்ளது. 


சான்றிதழ் தளத்தில், நோக்கியா 7.2 பெற்றுள்ள மதிப்பெண்களை பொறுத்தவரை, Single-core சோதனையில் 1604 மதிப்பெண்களும் Multi-core சோதனையில் 5821 மதிப்பெண்களும் கொண்டுள்ளது. NokiaPowerUser அறிக்கையின்படி, நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஆனது தனியாக வெளியாகாது. உடன் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும். ஆனால் இந்த தகவலை உறுதிப்படுத்தும் அளவிலான ஆதாரம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

சிறப்பான அம்சங்களுடன் அறிமுகமாகும் அடுத்த நோக்கியா ஸ்மார்ட்போன்!

சமீபத்தில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் லீக் ஆனதும், அதன் வழியாக நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அதன் முன்பக்கத்தில் யு-வடிவ நாட்ச் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்புறத்தில் வட்ட வடிவிலான கேமரா அமைப்பும், அதன் கீழே கைரேகை ரீடர் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. 


எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா 7.2 ஆனது 6.2 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 660அல்லது 710 SoC கண்டு இயங்கலாம். கேமராத்துறையை பொறுத்தவரை, Zeiss நிறுவனத்தின் 120-degree wide-angle லென்ஸ் உடனான 48MP அளவிலான கேமராவை அதன் பின்புறத்தில் கொண்டிருக்கலாம்.


நோக்கியா அதன் அறிமுக சுழற்சியை பின்பற்றும் பட்சத்தில், நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ஆனது நிகழவுள்ள IFA 2019-ல் அறிவிக்கப்படலாம். IFA 2019 என்பது வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் பெர்லினில் நடைபெறும் ஒரு சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆகும். 

Related posts

ஒப்போ ரெனோ2 5G விரைவில் அறிமுகம்!!

TechNews Tamil

வெறும் 8,500 ரூபாயில் Moto E6 Play ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

ஆகஸ்ட் 28 இல் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil