Mobile

அறிமுகமானது Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro!

சியோமி நிறுவனத்தின் மி நோட் 10 மற்றும் மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆனது நேற்று ஸ்பெயினில் நடந்த ஒரு வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகியுள்ளன.


1. மி நோட் 10 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி வகை – ரூ. 43,200

2.மி நோட் 10 ப்ரோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வகை – ரூ.51,000


மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது வாட்டர் டிராப் நாட்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது மேலும் வளைந்த விளிம்புகளை வெளிப்புறத்தில் கொண்டதாகவும் உள்ளது.

அறிமுகமானது Mi Note 10 மற்றும் Mi Note 10 Pro!

மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 730 ஜி ப்ராசஸர் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது, 6 ஜிபி ரேம், 5,260 எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 8பி லென்ஸ் மற்றும் 108 மெகாபிக்சல் கேமரா, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.


இந்த 2 போன்களுக்குமான ஒரே வித்தியாசம் ரேம் மற்றும் மெமரி மட்டுமே ஆகும். அதுபோக நோட் 10 ப்ரோ 8பி லென்ஸையும், மி நோட் 10 7பி லென்ஸையும் கொண்டுள்ளது.

இவை 6.47 இன்ச் அளவிலான கர்வ்டு முழு-எச்டி உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC ப்ராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.


20 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 5 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா போன்றவற்றையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்றவையும் உள்ளது.

Related posts

அறிமுகமானது ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் இன்று அறிமுகமாகியுள்ளது ஹானர் 9S ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil