ஆதார் அட்டை இந்தியாவில் அறிமுகமான பின்னர், ஆதார் எண்ணை நமது வங்கிக் கணக்கு, கேஸ் சிலிண்டர் கணக்கு என பலவற்றுடனும் இணைக்கக் கோரி வருகிறது மத்திய அரசாங்கம்.
வங்கிக் கணக்கு மற்றும் சிலிண்டர் கணக்குடன் பலரும் ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டனர். அதற்குக் காரணம் இவை இரண்டும் கட்டாயமாக்கப்பட்டதுதான். அதன்பின்னர் மத்திய அரசு பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறு அறிவித்தது.
அதாவது பான் எண் எனப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி என்று அறிவித்து இருந்தது.

ஆனால் அதற்குபின் இந்தக் காலக் கெடுவானது மீண்டும் நீட்டிக்கப்பட்டு அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக் கெடுவானது டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டுகள் முடக்கப்படும் என அரசு அறிவித்த காலக்கெடுக்குள் அனைவரும் இணைக்க மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதிக்குள் மீண்டும் மாற்றி அமைக்கப்படுமா என்பது தெரியவில்லை.