Mobile

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்!!

பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பினைக் கொண்டிருந்த மாடலான ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்  இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 6.7 இன்ச் டிஸ்பிளேவினையும் 2778×1284 பிக்சல் தீர்மானம் ஓஎல்இடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளதாகவும் உள்ளது. மேலும் இது சிறப்புமிக்க சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த போன் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி போன்ற மெமரி வகைகளில் வெளியாகி உள்ளது.

பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்!!

மேலும் இது ஐஓஎஸ் 14 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் டூயல் சிம் ஸ்லாட், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டுக்காக ஐபி68 வசதி கொண்டுள்ளது.

மேலும் லித்தியம் அயன் பேட்டரி கொண்டதாகவும், மேலும் பின்புறத்தில் 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா 5P லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 12 ப்ரோ தொடர் எச்டிஆர் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரையில் மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்ப வசதி கொண்டுள்ளது. மேலும் இது 5 ஜி ஆதரவு 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5 கொண்டுள்ளது.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் கோல்ட், கிராஃபைட், பசிபிக் ப்ளூ மற்றும் சில்வர் கலர் போன்ற நிறங்களில் வெளியாகியுள்ளது.

குறித்து பார்க்கையில், இதில் 128 ஜிபி மாடல் விலை ரூ.129900 எனவும் 256 ஜிபி மாடல் விலை ரூ.139900 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 512 ஜிபி மாடல் விலை ரூ.159900 ஆகும்.

Related posts

களமிறங்கத் தயார் நிலையில் நூபியா ரெட் மேஜிக் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் Oppo Reno Ace!!

TechNews Tamil