Gadgets

அறிமுகமானது கோடக் சி.ஏ. சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி.க்கள்!!

கோடக் நிறுவனம் தனது சி.ஏ. சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

1.    கோடக் சி.ஏ. டி.வி. சீரிஸ் 43 இன்ச் மாடலின் இந்திய விலை- ரூ. 23,999

2.    கோடக் சி.ஏ. டி.வி. சீரிஸ் 50 இன்ச் மாடலின் இந்திய விலை- ரூ. 27,999

3.    கோடக் சி.ஏ. டி.வி. சீரிஸ் 55 இன்ச் மாடலின் இந்திய விலை- ரூ. 30,999

4.    கோடக் சி.ஏ. டி.வி. சீரிஸ் டாப் எண்ட் 65 இன்ச் மாடலின் இந்திய விலை- ரூ. 49,999

அறிமுகமானது கோடக் சி.ஏ. சீரிஸ் ஆண்ட்ராய்டு டி.வி.க்கள்!!

இந்த புதிய கோடக் டி.வி.க்கள் விற்பனை மார்ச் 19 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

இந்த ஆண்ட்ராய்டு டிவியானது 3840×2160 பிக்சல் எல்.இ.டி. டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த டிவியானது மாலி – 450 டூயல்-கோர் GPU வசதி கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இந்த டிவியானது 1.75 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த  ஆண்ட்ராய்டு டி.வி. 9.0 கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது குரோம்காஸ்ட் பில்ட் இன் வசதி கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை வைபை 802.11 b/g/n 2.4GHz, ப்ளூடூத் 5.0, IR, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட், ஆக்ஸ் போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் கூகுள் பிளே ஹாட் கீ

30வாட் பாக்ஸ் பாட்டம் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

இது 4K ஸ்கிரீன் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் ஹெச்.எல்.ஜி. வசதி கொண்டதாக உள்ளது.

கேடக் சி.ஏ. சீரிஸ் டி.வி.யானது கூகுள் அசிஸ்டண்ட் வசதி  மற்றும் கூகுள் குரோம்காஸ்ட் பில்ட் இன் கொண்டுள்ளது. இந்த டிவியானது மெட்டல் ஸ்டான்ட் கொண்டு உள்ளது.

Related posts

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 !!

TechNews Tamil

விற்பனைக்கு வரவுள்ள ஐபேட் 2019!

TechNews Tamil

அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3!!

TechNews Tamil