ரியல்மீ X ஸ்மார்ட் போன் இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் அந்த போன் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ரியல்மீயின் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்க உள்ளது ரியல்மீ X. ரியல்மீ சார்பில் வெளியிடப்பட்ட போன்களில், X-ல்தான் பாப்-அப் செல்ஃபி கேமரா வசதி முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 710 எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டு இந்த போன் செயல்படுகிறது. மேலும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வசதியும் X-ல் உள்ளது.
ரியல்மீ X ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 4GB RAM + 128GB சேமிப்பு அளவு, 8GB RAM + 128GB சேமிப்பு அளவு என்ற ரியல்மீ X ஸ்மார்ட்போனின் வகைகள் 16,999 ரூபாய், 19,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில், 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் கேமரா என இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியைக் கொண்டுள்ளது. 4G வசதி, வை-ஃபை மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.