Apps

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Facebook Messenger டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

பேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் சேவையினை ஸ்மார்ட்போன் வைத்துள்ள யாரும் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.

சாதாரண chat களை பண்ண விரும்பும் பயனர்கள் பொதுவாக இந்த மெசஞ்சர் சேவையின் மூலமே அனுப்ப முடியும் என்பதால், இந்த சேவையினை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

மிகவும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள மெசஞ்சர் சேவையானது, தற்போது டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இதுவரை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சேவையானது, கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் டெஸ்க்டாப் வெர்ஷனாக ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Facebook Messenger டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

இதன்மூலம் வீடியோ சாட், கான்பிரன்ஸ் கால் போன்றவற்றினை செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷன் சேவையானது 2 வருட காலமாக சோதனையில் இருந்து வந்ததையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்குள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது.

 மெசஞ்சர் நிறுவனம் தனி நிறுவனமாக மாறியதுடன் கணினியில் மெசஞ்சர் சேவையின் அறிமுகத்திற்காக வாடிக்கையாளர்கள் பலர் காத்திருந்தனர்.

ஸ்மார்ட்போன்களைவிட, கணினியில் உள்ள இந்த பயன்பாடானது நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தொழில்முறைரீதியாக பயன்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

விண்டோஸ் இயங்குதளத்தில் பேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷனை இதை மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்தும், மேக் வெர்ஷனை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Related posts

இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தமுடியாது..!

TechNews Tamil

வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் வசதி அறிமுகம்!!

TechNews Tamil

7 நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்

TechNews Tamil