ஜியோ அவுட்கோயிங்க் செய்யும் கால்களுக்கான அழைப்பு ஒலியை குறைத்தது குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இது பெரிதளவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வெடித்தது.
மற்ற செல்போன் நிறுவனங்கள் பொதுவாக 30 வினாடிகள் முதல் 45 வினாடிகள் வரை அழைப்பு ஒலி நேரத்தை வழங்கின.
ஜியோவின் இந்த செயலை மற்ற நெட்வொர்க்குகள் புகார் சொல்ல, ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற அனைத்து நெட்வொர்க்குகளும் தங்களுக்குள் சண்டையிட்டன.

அழைப்பு ஒலி நேரத்தை குறைத்து லாபம் அடைவதாக செல்போன் நிறுவனங்களுக்குள் பிரச்சினை கிளம்பியது.
தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் புதிய நடைமுறையை விதித்துள்ளது.
அதன் படி செல்போனில் அழைப்பு ஒலி நேரம் 30 வினாடியாகவும், லேண்ட்லைன் போனில் அழைப்பு ஒலி நேரம் 60 வினாடியாகவும் இருக்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இது இன்னும் 15 நாட்களில் அமலுக்கு வர உள்ளது.