Games

அவென்ஜர்ஸ் எண்ட்கேமை கூகிள் பிளேவில் பதிவிறக்கம் செய்யலாம்.

 ‘அவென்ஜர்ஸ்: எண்ட்கேம்’ தற்போது இந்தியாவில் கூகுள் பிளே, ஐடியூன்ஸ் மற்றும் யூடியூப்பில் கிடைக்கப்பெறுகிறது. மூன்று சேவை தளங்களிலும் இந்த ‘எண்ட்கேம்’ 720p மற்றும் 1080p என இரண்டு தரங்களில் கிடைக்கப்பெருகிறது. இப்போதைக்கு, ஆங்கில பதிப்பு மட்டுமே இந்த திரைப்படம் கிடைக்கப்பெருகிறது.

 ஐடியூன்ஸில், நீங்கள் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் ரூ. 120 / ரூ. 150 அல்லது ரூ. 490 / ரூ. 690, வாடகைக்கு அல்லது பெற்றுக்கொள்ளலாம். கூகுளிற்கு சொந்தமான இரண்டு தளங்களிலும், பிரம்மாண்டமான மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் அத்தியாயத்தை ரூ. 100 / ரூ. 690 மற்றும் ரூ. 150 / ரூ. 850 செலுத்தி SD மற்றும் HD-யில் முறையே வாடகைக்கு அல்லது வாங்கிக்கொள்ளலாம்.

அவென்ஜர்ஸ் எண்ட்கேமை கூகிள் பிளேவில் பதிவிறக்கம் செய்யலாம்.

இப்போது உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 2.793 பில்லியன் டாலர்கள். இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் முதலில் ஏப்ரல் 26 அன்று வெளியிடப்பட்டது. இது உலகளவிலும் மற்றும் இந்தியாவிலும் அதன் தொடக்க வாரத்திலேயே புதிய சாதனைகளை படைத்தது. ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபார் ஹோம்’  வெளியான வாரத்தில் டிஸ்னி இந்தியா எண்ட்கேமை (கூடுதல் காட்சிகளுடன்) மீண்டும் வெளியிட்டது.

மிக விலையுயர்ந்த படங்களில் எண்ட்கேம் ஒன்றாகும், இதன் மதிப்பிடப்பட்ட தயாரிப்பு பட்ஜெட் 356 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2,447 கோடி) .

Related posts

ஃபோர்ட்நைட்: 22 கோடியே 66 லட்சம் ரூபாய் பரிசு வென்ற சிறுவன்!

TechNews Tamil

வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கான மொபைல்..!!

TechNews Tamil

பிஎஸ்என்எல் அபிநந்தன் திட்டம்: ரூ.151/- பிளானில் திருத்தம்

TechNews Tamil