உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைப்போர்களுக்காக ஸ்மார்ட் வாட்ச்சுகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது, அந்தவகையில் ஸ்மார்ட் வாட்சுகளை அதிக அளவில் தயாரித்து வெளியிடும் நிறுவனமான அமேஸ் ஃபிட் Amazfit T-Rex என்னும் வாட்ச்சினை தயாரித்துள்ளது.
அதாவது இந்த வாட்ச்சில் சாதாரண அம்சங்களுடன் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்பீடோ மீட்டர், இதய துடிப்பு மானிட்டர் செய்யும் கருவி, இரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, தூங்கும் நேரம் தெரிந்துகொள்ளும் அம்சம் என பலவும் இவற்றில் உள்ளது.
இந்த வாட்ச் தற்போது அதன் விற்பனையினை அமேசான் ஆன்லைன் மற்றும் அமேஸ்பிட்டின் இணைய தளம் இரண்டிலும் துவக்கியுள்ளது.

இந்த Amazfit T-Rex ஸ்மார்ட்வாட்ச் ஆனது 360*360 அளவுள்ள அமோல்டு டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும் மற்றும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.
Amazfit T-Rex ஸ்மார்ட்வாட்ச் 390 ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இதில் ப்ளூடூத் வி 5.0 உள்ளது. மேலும் மேலும் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச்சில் 14 வகையான ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.