ஜெர்மன் நிறுவனமான டெலிஃபங்கன் நிறுவனம் இந்தியாவில் தனது 39 இன்ச் மற்றும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
1. டெலிஃபங்கன் நிறுவனத்தின் 39 இன்ச்(TFK39HDS) ஸ்மார்ட் டிவி விலை- ரூ.17,990
2. டெலிஃபங்கன் நிறுவனத்தின் 43-இன்ச்(TFK43QFS) ஸ்மார்ட் டிவி விலை- ரூ.20,990
39 இன்ச் டெலிஃபங்கன் ஸ்மார்ட் டிவி எச்டி டிஸ்பிளே உடன் 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. இந்த 43 இன்ச் டிவி மாடல் ஆனது முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பினையும் 1920 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவிக்கள் ஏ-பிளஸ் கிரேடு பேனல் கொண்டதாக உள்ளது, இந்த ஸ்மார்ட் டிவிக்கள் கிரிக்கெட் பிக்சர் மோட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கள் சிறந்த பார்வை அனுபவத்தினைக் கொடுக்கும் சினிமா மோட் கொண்டுள்ளது.
இணைப்பு அம்சமாக புளூடூத் வசதி கொண்டுள்ளது, Eshare ஆப் மூலம் கோப்புகள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிரமுடியும்.
இந்த டிவிக்கள் குவாட்-கோர் செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்டுள்ளது.