Apps

சொமோட்டோ, ஸ்விக்கிக்கு தெலுங்கானாவில் தற்காலிகத் தடை!!

ஊரடங்கு உத்தரவின் காரணமாக சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் தற்போது அத்தியாவசியப் பொருட்களை பேடிஎம் போன்றவற்றுடன் இணைந்து செய்து வருகிறது.

மார்ச் மாதம் கேரளாவில் சொமோட்டோ அதன் சேவையினை துவக்கிய நிலையில், தற்போது இந்தியாவின் 80 நகரங்களில் மளிகை பொருட்கள் விநியோக சேவைகளை தொடங்கியுள்ளது.

கேரளாவை அடுத்து சென்னையிலும் சொமோட்டோ மற்றும் ஸ்விக்கி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

சொமோட்டோ, ஸ்விக்கிக்கு தெலுங்கானாவில் தற்காலிகத் தடை!!

சமீபத்தில் சொமேட்டோ நிறுவனம் மளிகை பொருட்கள் விநியோகத்துடன் சொமேட்டோ கோல்ட் மெம்பர்ஷிப்பை இன்னும் 2 மாதங்களுக்கு இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், லெபனான், துருக்கி, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கத்தார் போன்ற பகுதிகளுக்கு நீட்டித்துள்ளது.

சமீபத்தில் ஆன்லைன் டெலிவரி செய்த நபருக்கு கொரோனா இருந்ததையடுத்து, அவர் டெலிவரி செய்த வீடுகளின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் டெலிவரி ஊழியர்கள் உணவகங்களுக்கு செல்லும்போது சோதனை செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை அனுமதிக்கப்பட்ட 98.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகிலிருந்தால் மட்டுமே டெலிவரி செய்ய அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவை ஒருபுறம் இருக்க தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் மே மாதம் 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களான சொமேட்டோ, ஸ்விகி போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு தற்போது தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

Related posts

வோடபோன் வழங்கும் 100 சதவீத கேஷ்பேக்!

TechNews Tamil

முகக்கவசம் அணிந்தால்,, இந்த அம்சம் வழங்குவோம்.. ட்விட்டர் போட்ட கண்டிஷன்!!

TechNews Tamil

200 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப்!!

TechNews Tamil