தேஜாஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனியார் ரயில் அக்டோபர் 4 முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இது தற்போதைக்கு லக்னோ முதல் டெல்லி வரை மட்டுமே இயங்குகிறது. இந்த ரயில் ஏறக்குறைய விமானத்தில் உள்ளது போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டதாக உள்ளது.
அதாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 5 படுக்கை இடங்கள், 50 நாற்காலிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் உள்ள சில விதிமுறைகள் பலரையும் கவர்ந்துள்ளது, அதாவது ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால், பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு முழு டிக்கெட் எடுக்க வேண்டும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.
இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், ஒவ்வொரு பயணிகளுக்கும் 250 ரூபாய் வழங்கப்படும். ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ.25 லட்சம் பயண காப்பீடு வழங்கப்படுகிறது.