மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி, 720×1,612 பிக்சல் தீர்மானம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி கொண்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
கேமரா என்று கொண்டால் பின்புறத்தில் 16எம்பி மெயின் கேமரா, மற்றும் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.
மெமரி என்று கொண்டால் இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் வசதியினைக் கொண்டதாக உள்ளது.