Mobile

சீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் சீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் டாட் நாட்ச் டிஸ்ப்ளே, 720 x 1600 பிக்சல் தீர்மானம் கொண்ட தெளிவுத்திறன், 90.34% பாடி டிஸ்பிளே விகிதத்துடன் 20: 9 விகித 480 நைட்ஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் சிபியு ஹீலியோ ஏ 25 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

சீனாவில் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம் மற்றும் 2 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் கூடுதலாக 256 ஜிபி வரை எஸ்.டி கார்டு மூலம் இயங்குவதாக உள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன் 16 எம்பி ஏஐ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா எஃப் 2.0 துளை வசதியினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஃபேஸ் அன்லாக் 2.0 மற்றும் ஸ்மார்ட் கைரேகை சென்சார் மூலம் இயங்குவதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஒரேநாளில் விற்பனைக்கு வந்த 3 ஐ போன்கள்!! விலைப்பட்டியல் இதோ!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகிய ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil