Mobile

இந்தியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 7 புரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 7 புரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 720 x 1600 தெளிவுத்திறன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 6.6 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே அமைப்பினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமரா என்று கொள்ளும்போது 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்!

டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ கொண்டு HIOS 7.5 இயங்குதளத்தில் இயங்குவதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் ஹீலியோ ஜி 80 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி என்று கொண்டால் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 4 ஜிபி, 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி, 128 ஜிபி என மூன்று உள்ளடக்க வகைகளில் வெளியாகியுள்ளது.

மேலும் இது 5000 mAh பேட்டரியுடன் 10W சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொள்கையில் 4 ஜி VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி நோட் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நிறுத்தப்பட உள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்

TechNews Tamil