Mobile

சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த டெக்னோ ஸ்பார்க் 6  ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1640 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஜி70 பிராசஸர் வசதி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 16எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி ஏஐ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், இரட்டை சிம், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள சலுகைகள்!!

TechNews Tamil

சீனாவில் இன்னும் 6 நாட்களில் களம் இறங்கவுள்ள ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜியோ அறிமுகப்படுத்தும் ஃபீச்சர் போன்!!

TechNews Tamil