மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் அக்வா ப்ளூ, ஐஸ் ஜேடைட் மற்றும் மிஸ்டரி வைட் போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.
இந்த டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 480 nits பிரைட்நஸ் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டதாகவு, கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஏ25 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 (HiOS 6.2) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், ஏஐ லென்ஸ் போன்றவற்றினையும் மேலும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.
மேலும் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.