Mobile

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன்!!

டிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் ஆனது 7 இன்ச் 1640X720பிக்சல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 6 ஏர் ஸ்மார்ட்போன் ஹைஒஎஸ் 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. கேமரா அளவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார்

வசதி கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

பொங்கல் தள்ளுபடி: விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!!

TechNews Tamil

இரு தினங்களில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி நோட் 10லைட்!!

TechNews Tamil

அறிமுகமானது போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil