Mobile

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன்!!

டெக்னோ ஸ்பார்க் 5  என்ற ஸ்மார்ட்போன் சீனாவை அடுத்து தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் எச்டி உடன் டாட்-இன் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் HiOS 6.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது.

இந்த டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஏ 22 செயலியினைக் கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இது, 3  ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க வசதி கொண்டுள்ளது.

சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் அறிமுகமானது டெக்னோ ஸ்பார்க் 5  ஸ்மார்ட்போன்!!

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை இந்த Tecno ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது, குவாட் ரியர் கேமரா அமைப்பினையும், 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவது AI ஷூட்டர் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி எல்டிஇ, வைஃபை 802 ஏசி மற்றும் புளூடூத் 5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

மேலும் கூடுதலாக, ஆக்சிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் சென்சார் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

Related posts

அக்டோபர் மாதம் 1ம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்

TechNews Tamil

இன்று அறிமுகமான ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒன் 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil