மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் டெக்கோ போவா 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.9 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் 1080 x 2460 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஜி88 சிப்செட் டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஜி88 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 சார்ந்த HiOS இயங்குதளத்தை கொண்டுள்ளது.
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன் ஆனது மெமரி அளவாக 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் மெமரி அளவாகக் கொண்டுள்ளது.
கேமரா அளவாக பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார் மற்றும் 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவாக 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி கொண்டுள்ளது.