Mobile

இந்தியாவில் டிசம்பர் 11 ஆம் தேதி களம் இறங்கவுள்ள டெக்னோ போவா ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் தற்போது டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த டெக்னோ போவா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ போவா ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் எச்டி பிளஸ் டாட்-இன் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720×1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

டெக்கோ போவா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், ஏஐ லென்ஸ் போன்றவற்றினையும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் டிசம்பர் 11 ஆம் தேதி களம் இறங்கவுள்ள டெக்னோ போவா ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

டெக்னோ போவா ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினையும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை HiOS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி.போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது

Related posts

இந்தியாவில் களம் இறங்கியது ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Oppo A9 2020 ஸ்மார்ட்போனுக்கு 1500 ரூபாய் தள்ளுபடி!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் டெக்னோ ஸ்பார்க் 6 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil