Mobile

சீனாவில் அறிமுகமானது டெக்னோ பூவா ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் அதன் பூவா ஸ்மார்ட்போனை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த  டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் ஹெச்டி பிளஸ் டாட் இன் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகமானது டெக்னோ பூவா ஸ்மார்ட்போன்!!

மேலும் டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஹை ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது. 

கேமராவினைப் பொறுத்தவரை 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, கொண்டுள்ளது. பின்புறத்தில் பாதுகாப்பு அம்சமாக கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது. டெக்னோ பூவா ஸ்மார்ட்போனினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

டெக்னோ பூவா ஸ்மார்ட்போன் ஸ்பீடு பர்ப்பிள், டேசில் பிளாக் மற்றும் மேஜிக் புளூ போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.

Related posts

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

விற்பனையினைத் துவக்கி உள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆகஸ்ட் 21-ல் அறிமுகமாகும் ‘Mi A3’ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil