Mobile

இந்தியாவில் வெளியான டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் அதன் டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் 6.85 இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டதாகவும், மேலும் 2460×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் 800MHz Mali-G76 3EEMC4 GPU கொண்டதாகவும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் வெளியான டெக்னோ கமோன் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன்!!

மேலும் இது மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128 ஜிபி (UFS 2.1) மெமரி வசதி கொண்டதாகவும் மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றையும் முன்புறத்தில் 48எம்பி மற்றும் 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவினையும் கொண்டுள்ளது.

மேலும் டெக்னோ கமோன் 16 ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஏச் பேட்டரி கொண்டதாகவும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் உள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

Samsung Galaxy A70s ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு அப்டேட்!!

TechNews Tamil

இன்றுமுதல் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6!

TechNews Tamil