Mobile

சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்!

டெக்னோ நிறுவனம் டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் முழு எச்டி பிளஸ் டூயல் டாட்-இன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராஸசர் உடன் மாலி-ஜி 76 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்!

மெமரி அளவினைப் பொறுத்தவரை டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 48எம்பி மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், க்ளோனஸ், வைஃபை, புளூடூத் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.19,626-ஆக உள்ளது.

Related posts

விற்பனையைத் துவங்கியது Redmi 8!

TechNews Tamil

விவோ இசெட்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி !

TechNews Tamil

களமிறங்கத் தயார் நிலையில் கேலக்ஸி எஸ்20!!

TechNews Tamil