Mobile

நைஜீரியாவில் டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் நைஜீரியாவில் டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் 1080 × 2460 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதி கொண்டுள்ளது. டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

நைஜீரியாவில் டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 1256 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா லென்ஸ் மற்றும் 48எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

டெக்னோ கேமன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் வெளியானது ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.7 ஆயிரத்தில் உங்களுக்கான நவீன போன்கள்.!

TechNews Tamil