மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் டெக்னோ போவா கேமிங் ஸ்மார்ட்போனை டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த டெக்னோ போவா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
டெக்னோ போவா கேமிங் ஸ்மார்ட்போன் மேஜிக் ப்ளூ, ஸ்பீட் பர்பில் மற்றும் டோசில் பிளாக் போன்ற வண்ணங்களில் வெளியாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் மூலம் இயங்கும் தன்மை கொண்டிருக்கும். மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு அமைப்பினைக் கொண்டிருக்கும்.

டெக்னோ போவா ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் எச்டி ப்ளஸ் டாட் இன் டிஸ்ப்ளேவினையும், 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்தையும் கொண்டு இருக்கும்.
மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பஞ்ச் ஹோல் வசதியினையும் 8 எம்பி செல்பி கேமராவைக் கொண்டு இருக்கும். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியினைக் கொண்டு இருக்கும்.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம், 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கும்.
இது ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டு இருக்கும் என்றும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 18 வாட்ஸ் வேக சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டு இருக்கும்.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரையில் 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவைக் கொண்டு இருக்கும்.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4ஜி வோல்ட், யூஎஸ்பி டைப்சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டு இருக்கும்.