Apps

அடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு!!

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த கொள்கைகளுக்கு அனுமதி வழங்கப்படாத பயனர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு பின்னர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்றும் வாட்ஸ் அப் கூறியது.

வாட்ஸ் அப்பின் இந்த தனியுரிமைக் கொள்கைகள் பயனர்களின் இணைய சுதந்திரத்தைப் பறிப்பதாக வாட்ஸ் அப் பயனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.

அடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு!!

அந்தவகையில் வாட்ஸ் ஆப் போன்றே அம்சத்தினைக் கொண்டுள்ள சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் பயனர்கள் மத்தியில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இருப்பினும் தொடர்ந்து பலரும் சிக்னல் செயலியினை தொடர்ந்து டவுண்ட்லோடு செய்து வருவதால், தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டு சிக்னல் செயலி தற்காலிகமாக செயல்படாமல் போனது.

அதனைத் தொடர்ந்து சிக்னல் செயலி அதன் குறைபாட்டினைச் சரி செய்ததும், அது மீண்டும் செயல்பட துவங்கியது. இந்த நிலையில் சிக்னல் செயலி கூறியுள்ளதாவது, “தற்போதைக்கு சிக்னல் செயலியின் செயல்பாட்டில் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளது. நிச்சயம் அடுத்த அப்டேட்டில் குறைகள் சரி செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளது.

Related posts

வாட்ஸ்அப் வெப் தளத்தில் அறிமுகமாகவுள்ள பேஸ் அன்லாக் அம்சம்!!

TechNews Tamil

அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ள அமேசான்!!

TechNews Tamil

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி நீக்கம்!!

TechNews Tamil