சாம்சங் நிறுவனம் 2019 ஆம் ஆண்டின் சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் புதுவித வடிவமைப்பு கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2020 சர்வதேச கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
அதாவது இது, சதுரங்க வடிவமைப்பு கொண்டதாக உள்ளது. இதில் பன்ச் ஹோல் ரக கேமரா போன்றவைகள் உள்ளது என்றும் தெரிகிறது.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசர் வெளியாகியுள்ளது. இந்த புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே மற்றும் 1 இன்ச் கவர் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

மேலும் இதன் விலை முதல் தலைமுறை மாடலை விட குறைவாக இருக்கும் என்றே தகவல்கள் வெளியாகின்றன.
இந்த டீசர் வெளியானதும் பயனர்கள் அதிக ஆர்வத்துடன், இதனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.