Apps

டாட்டா ஸ்கையில் அதிரடிக்கும் அசத்தலான ஆஃபர்கள்!

டாட்டா ஸ்கையில் ஏற்கனவே உள்ள ஆஃபரில் சிறிது மாற்றம் செய்து புதிய ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் DTH சேவையில் டாட்டா ஸ்கை முன்னனி இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக ஏர்டெல், டிஷ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளது. இருப்பினும் மற்ற நிறுவனங்களை விட டாட்டா ஸ்கையில், அதன் ஒளிபரப்பு சேவை, பிக்சர் குவாலிட்டி சற்று தரம் வாய்ந்ததாக இருக்கிறது. 

இந்த நிலையில், தற்போது டாட்டா ஸ்கையில் புதிய ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாதத்திற்கு உண்டான கட்டணம் செலுத்தினால், கூடுதலாக 1 மாதத்திற்கான சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

டாட்டா ஸ்கையில் அதிரடிக்கும் அசத்தலான ஆஃபர்கள்!

இது கிட்டத்தட்ட முன்பே இருந்த ஆஃபர் தான். இதற்கு முன்பு 11 மாதங்களுக்கு கட்டணம் செலுத்தினால், 1 மாதம் கூடுதல் சேவை வழங்கப்பட்டு வந்தது. அதை இப்போது சற்று மாற்றி அமைத்துள்ளார்கள். 

12 மாதம் கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பேக்குகளைப் பொறுத்து மாறுபடும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு, எந்த சேனல் வேண்டுமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்திக்கொள்ளலாம் என்ற முறை தான் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் குறைந்தபட்ச கட்டண நிர்ணயம், சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படும். 

புதிய ஆஃபரில் வாடிக்கையாளர்கள் 12 மாதத்திற்கு கட்டணம் செலுத்தும் பட்சத்தில், அடுத்துள்ள 13வது மாதத்திற்கான கட்டணம் வாடிக்கையாளர்கள் அக்கவுண்டில் உடனடியாக சேர்ந்துவிடும். 

டாட்டா ஸ்கை HD மற்றும் SD ஆகிய இரு செட்டாப் பாக்ஸ் விலை 300 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விபரங்களின்படி, SD செட்டாப் பாக்ஸ் 1,399 ரூபாய் என்றும், HD செட்டாப் பாக்ஸ் விலை 1,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

விற்பனையில் முன்னணியில் இருக்கும் மொபைல் ஆப்ஸ் ….

TechNews Tamil

இத்தனை அம்சங்களைக் கொண்டதா கூகுள் லைவ் ரிலே!

TechNews Tamil

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Facebook Messenger டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil