ஒவ்வொரு நெட்வொர்க்கும் பல ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகையில், தற்போது அந்த வகையில் டாடா ஸ்கை அசத்தலான ஆஃபர்களை வழங்கி வருகிறது.
கேபிள் டிவிக்காக ட்ராய் அமைப்பின் மூலம், பல விதிமுறைகளை வகுத்து அறிவித்தது. அதன்படி கட்டண அளவில் பல சலுகைகள் கிடைக்கப் பெற்றது.

தற்போது என்சிஎப் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது டாடா ஸ்கை. கேபிள் வழியாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு பல நெட்வொர்க்குகளும் கட்டணங்களைக் குறைத்துவரும் நிலையில், டாடா ஸ்கை கட்டணங்களை குறைத்துள்ளது.
டாடா ஸ்கை நிறுவனம் தற்போது, என்சிஎப் கட்டணத்தை குறைத்துள்ளது. அதாவது ரூ.130 சேனல்களுடன் மல்டி டிவி இணைப்புகளையும் வழங்குகிறது.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது, மற்ற நெட்வொர்க்குகளும் என்சிஎப் கட்டணத்தினை விரைவில் குறைக்கும் என்று தெரிகிறது.