வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும் அதிக அளவிலான திட்டங்களை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது டாடா ஸ்கை.
ஹைதராபாத் பகுதியில், 100 எம்.பி.பி.எஸ் திட்டமானது அன்லிமிடேட் டேட்டா, வேலிடிட்டி கால அளவு 3 மாதங்களாக வருகிறது. மொத்த விலை ரூ.4,197 ஆகும்.
அதாவது மாதத்திற்கு ரூ.1,399 செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு கூடுதல் சேவை கிடைக்கும். அதாவது, ரூ .4,197 என்ற ரூபாய்க்கு சந்தாதாரர்களுக்கு 4 மாதங்கள் 100 எம்.பி.பி.எஸ், அன்லிமிடேட் டேட்டா ஆகியவற்றுடன் மாத விலையை ரூ .1,049 ஆகக் குறைத்துள்ளது.

இந்த திட்டம் 7 மாதம், 12 மாத சந்தா என்ற 2 வகைகளில் உள்ளது. 7 மாத சந்தாவில், மூன்று மாத கூடுதல் சேவை கிடைக்கிறது.
மாதாந்திர செலவு ரூ. 979 ஆக குறைகிறது. கூடுதலாக இலவச வை-பை, இலவச நிறுவல் மற்றும் பாதுகாப்பான காவல் போன்றவையும் கிடைக்கும்.
12 மாத சந்தாவில், ஆறு மாதங்களுக்கு கூடுதல் சேவை காலம் கிடைக்கும்.
இதன், மொத்த விலை ரூ .16,788 ஆகும். மாத விலை மாதத்திற்கு ரூ .932 ஆக குறைகிறது. கூடுதலாக இலவச வை-பை, இலவச நிறுவல் மற்றும் பாதுகாப்பான காவல் போன்றவையும் கிடைக்கும்.