டாடா ஸ்கை ஆனது அதன் பயனர்களுக்காக பலவகையான அம்சங்களுடன் கூடிய புதிய மாத வருடாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டங்களானது தமிழ், பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.
தமிழில் உள்ள 4 திட்டங்கள்
- தமிழ் லைட் பிளஸ் எச்டி,
- தமிழ் லைட் பிளஸ் எஸ்டி,
- தமிழ் லைட் புதிய எச்டி, மற்றும்
- தமிழ் லைட் புதிய எஸ்டி

- தமிழ் பிளஸ் எச்டி பேக் – (ரூ.374)
இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு 13 தமிழ் சேனல், 5 கன்னட சேனல், 5 தெலுங்கு சேனல், 6 மலையாள சேனல், 3 இன்ஃபோடெயின்மென்ட், 1 ஆங்கில செய்தி சேனல், 1 இந்தி திரைப்பட சேனல், 2 இந்தி செய்தி சேனல் மற்றும் 4 விளையாட்டு சேனல்கள் போன்றவை வழங்கப்படுகிறது.
- தமிழ் லைட் புதிய எச்டி பேக் – (ரூ.319)
இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு 12 தமிழ் சேனல், 3 இன்ஃபோடெயின்மென்ட், 4 விளையாட்டு சேனல், 1 ஆங்கில செய்தி சேனல், 1 இந்தி திரைப்பட சேனல், 1 இசை சேனல், 2 இந்தி செய்திகள் மற்றும் 1 மலையாள சேனல் வழங்கப்படுகிறது.
- தமிழ் லைட் நியூ எஸ்டி பேக் – (ரூ.225)
இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு 13 தமிழ் சேனல், 5 கன்னட சேனல், 6 தெலுங்கு சேனல், 6 மலையாள சேனல், 1 ஆங்கில செய்தி, 1 இந்தி திரைப்பட சேனல், 2 இந்தி செய்தி சேனல், 4 விளையாட்டு சேனல்கள் வழங்கப்படுகிறது.
- தமிழ் லைட் நியூ எஸ்டி பேக் – (ரூ.199)
இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு 12 தமிழ் சேனல், 3 இன்போடெயின்மென்ட், 4 விளையாட்டு சேனல் மற்றும் 1 மலையாள பிராந்திய சேனல் வழங்கப்படுகிறது.