டாடா ஸ்கை நிறுவனம் ஆறுமாதத்திற்கு இலவச சேவையை அறிவித்துள்ளது. டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவையின் 12 மாத திட்டத்தின் கீழ், பயனர்கள் கூடுதலாக ஆறு மாத காலம் இலவச சேவை பெறுவார்கள்.
டாடா ஸ்கை பிராட்பேண்ட்டின் 9 மாத கால திட்டத்தை தேர்ந்தெடுத்தால், கூடுதலாக 4 மாத காலம் இலவச சேவை கிடைக்கும்.
டெலிகாம் டாக் வலைதளத்தின் படி, டாட் ஸ்கை நிறுவனம் ஆனது எந்தவொரு தினசரி/ மாத வரம்பும் இல்லாமல் 100Mbps வேகத்திலான சேவையையோ வழங்குகிறது.

டாடா ஸ்கை பிராட்பேண்ட் வழங்கும் இந்த இலவச சேவையானது அதன் அன்லிமிடேட் திட்டங்கள் மற்றும் Fixed GB data திட்டங்கள் ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கிறது.
அன்லிமிடேட் திட்டங்களைப் பொறுத்தவரை ரூ.590, ரூ.700, ரூ.800, ரூ.1,100/- மற்றும் ரூ.1,300/- என மொத்தம் ஐந்து ஒரு மாத திட்டங்கள் உள்ளது. இந்த திட்டங்கள் முறையே 16Mbps, 25Mbps, 50Mbps, 75Mbps மற்றும் 100Mbps வேகத்திலான இணைய சேவையை வழங்கக் கூடியது.
ஒரு மாத கால திட்டத்தின் கீழ் எந்த இலவச சேவையும் கிடைக்காது. ஆனால் 9 மாத கால திட்டத்தின் கீழ் உங்களுக்கு கூடுதலாக 4 மாதம் இலவச சேவை கிடைக்கும்.