மக்களின் பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது வங்கிச் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்தான். கட்டணம் ஒருபுறம் இருப்பினும், அந்த சேவைகளுக்கு அவர்கள் விதித்துள்ள விதிமுறையோ அதற்கு மேலாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு இவ்வளவு முறை தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும், அதற்குமேல் எடுத்தால் கட்டணம் என்ற விதிமுறை பலர் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்திய ஒன்றாக உள்ளது.
தற்போது இதுகுறித்த ஒரு நற்செய்தியினை எஸ்பிஐ தற்போது அறிவித்துள்ளது, அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனிமேல் அளவில்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுத்துக் கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களின் அதிருப்தியினைக் குறைக்க, ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
25 ஆயிரம் ரூபாய் குறைவாக பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை பணம் எடுக்கலாம்.
அதன்படி ரூ.25 ஆயிரம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 40 முறை ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம்.
1 லட்சம் அல்லது அதற்கு மேலே மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட்டாக பணம் எடுக்கலாம்.