Information Technology

கொரோனா எதிரொலி… ஏடிஎம்-இல் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கோங்க…

கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 5,58,502 பேர் இதுவரை உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 25,250 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவில் 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை தீவிரமானதன் காரணமாக, தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.

மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பலவிதமான சேவைகளையும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் செய்து வருகின்றன.

கேரளாவில் ரேஷன் பொருட்கள் சொமோட்டாவுடன் இணைந்து வீடுகளில் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அரசு வங்கிப் பணப்பரிமாற்றம், குறைந்தபட்ச இருப்புத் தொகை குறித்த சில சலுகைகளை வழங்கியுள்ளது.

கொரோனா எதிரொலி… ஏடிஎம்-இல் எத்தனைமுறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கோங்க…

அதாவது வேறு எந்த வங்கி ஏடிஎம்மிலிருந்தும் வாடிக்கையாளர் மூன்று மாதங்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த சேவையானது ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.

மேலும் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பையும் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நீக்கியுள்ளது, அதன்மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும். இதற்கான அபராதத் தொகையானது வசூலிக்கப்பட மாட்டாது.

சேமிப்பு கணக்கில் சராசரி மாத இருப்பை பராமரிக்க வேண்டும் என்பதற்கான அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஏர்டெல்லின் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு

TechNews Tamil

தேஜாஸ் ரயிலில் அறிமுகமாகவுள்ள புதிய சேவை!!

TechNews Tamil

டாடா ஸ்கை வழங்கும் அசத்தலான 4 புதிய திட்டங்கள்!

TechNews Tamil