Gadgets

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் அறிமுகமானது தைவா ஸ்மார்ட் டிவிக்கள்!

தைவா நிறுவனம் 32 இன்ச் D32S7B மற்றும் 39 இன்ச் D40HDRS என்ற இரண்டு வகையான ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 2 ஆண்டு வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிக்களும் இந்தியாவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இன்னும் இரண்டு வாரங்களில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1.   39 இன்ச் கொண்ட D40HDRS தைவா ஸ்மார்ட் டிவியின் விலை- ரூ.16,490

2.   32 இன்ச் கொண்ட D32S7B தைவா ஸ்மார்ட் டிவியின் விலை- ரூ.9,990

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் அறிமுகமானது தைவா ஸ்மார்ட் டிவிக்கள்!

இந்த இரண்டு தைவா ஸ்மார்ட் டிவி மாடல்களும் 1366X768 ரெசல்யூஷன் கொண்டதாகவும் மேலும் இது ஏ பிளஸ் கிரேடு பேனல் வசதிகளைக் கொண்டும் உள்ளது. மேலும் இந்த டிவி குவாண்டம் லுமினிட் எச்ஆர்டிபி தொழில்நுட்ப வசதி கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த புதிய தைவா ஸ்மார்ட் டிவிக்களும் மிராகாஸ்ட் மற்றும் ஈ-ஷேர் வசதி, 2 யூ.எஸ்.பி மற்றும் 2 எச்.டி.எம்.ஐ போர்ட்டு போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் ஆடியோவுடன் இணைக்க புளூடூத் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த டிவியானது குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இந்த டிவியானது ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இந்த டிவியானது கிரிக்கெட் பிக்சர் மோட் கொண்டுள்ளது, தைவா 39-இன்ச் டிவி மாடலினைப் பொறுத்தவரை 20வாட் பில்ட்-இன்-ஸ்பீக்கர் உள்ளது, 32-இன்ச் டிவி மாடலில் ஸ்போர்ட்ஸ் சரவுண்ட் சவுண்ட் கொண்ட 20வாட் ஸ்பீக்கர் வசதி உள்ளது.

.

Related posts

9 லட்சம் ரூபாய் கேமரா 1 மணி நேரத்தில் விற்றுத் தீர இதுதான் காரணம்..

TechNews Tamil

6 புதிய லேப்டாப் மாடல்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்த டெல்.!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாக உள்ள ஃபாசில் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil