Apps

150 நகரங்களில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ள ஸ்விக்கி!!

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி நிறுவனம், டிசம்பர் மாதம் மளிகை விநியோக சேவையினைத் துவக்கியது. முதற்கட்டமாக இந்த சேவையினை பெங்களூரு மற்றும் குருகிராமில் துவங்கியது.

தற்போது கொரோனா வைரசின் தாக்கம் அதிகமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் பிரதமர் மோடி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே தங்கி வருகின்றனர். வெளியே வர முடியாத இந்த சூழ்நிலையில் ஸ்விக்கி அதன் மளிகை டெலிவரி செய்யும் சேவையினை மற்ற நகரங்களில் துவக்கும்பட்சத்தில் அது சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதாவது தற்போது ஸ்விக்கி மளிகை டெலிவரி செய்யும் சேவையை இந்தியாவின் 150 நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த சேவையானது ஏப்ரல் 14ம் தேதி வரை மிகச் சிறப்பான அளவில் செயல்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

சமீபத்தில் ஸ்விக்கிக்கு போட்டி நிறுவனமான, சொமோட்டோ நிறுவனம் கேரள அரசுடன் இணைந்து கேரளாவில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வீடு வீடாக விநியோகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

CamScanner ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!

TechNews Tamil

டிக் டாக் செயலிக்கு மாற்றாக மித்ரன் செயலி!!

TechNews Tamil

இனி இந்த போன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது!!

TechNews Tamil