கொரோனாவினைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு பலவிதமான விதிகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. கொரோனா வைரஸினால் சீனாவில் 3100 பேர் உயிர் இழந்துள்ளனர், மேலும் 6000 பேர் கவலைக்குரிய நிலைமையில் உள்ளனர்.
தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு தற்காப்பாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவுடன் சேர்த்து கைகழுவும் சானிடைஸர் பாக்கெட் ஒன்றையும் இலவசமாக வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தற்காப்பாக ஸ்விக்கி நிறுவனம், பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதாவது ஸ்விக்கி நிறுவனத்தின் டெலிவரி பாட்னர்களுக்கு சுவாசக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களுக்கு சானிட்டசைர் கொண்டு அடிக்கடி கை கழுவும் முறை, எந்த மாதிரியான முறைகளில் கை கழுவுதல் போன்றவை மருத்துவக் குழுவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்குரிய எங்கள் டெலிவரி பார்ட்னர்கள் தாங்களாகவே அறிவுறுத்தி உள்ளோம். மேலும் நிதி ரீதியாக உதவ முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் உணவுப் பொருட்களை கையாளும் போதும், பேக்கேஜிங் செய்யும் போதும் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் டெலிவரி பார்டனர்களுக்கு வைரஸ் ரீதியான ஏதேனும் அறிகுறைகள் தென்பட்டால், ஸ்விக்கி சார்பில் இலவச மருத்துவ ஆலோசனையை வழங்குகிறோம் என்று கூறியுள்ளனர்.
உணவு ஆர்டர் செய்பவர்கள் கொரோனா பாதிப்பு கொண்டிருந்தால் உணவை வீட்டு வாசலிலேயே வைத்து செல்லுமாறு நீங்கள் அறிவுறுத்தவும் செய்யலாம்.