Games

கொரோனாவால் பலியானவர்களுக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்ட பப்ஜி கேம்!!

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க் ஆப் பப்ஜி ஆகும்.

இந்த பப்ஜி விளையாட்டினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவந்த நிலையில், சமூக ஆர்வலர்கள் இது மாணவர்களை சீரழிப்பதாய் புகார் கூற, இந்திய அரசாங்கம் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் விளையாட முடியாதபடி இதனைத் தடை செய்தது.

கொரோனாவால் உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இந்தநிலையில் டிவி, இணையம், மொபைல் போன்றவையே இவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.

இந்தநிலையில் பப்ஜி கேம் ஆனது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஏப்ரல் 4 ஆம் தேதி இந்த கேமை யாராலும் விளையாட முடியவில்லை.

கொரோனாவால் பலியானவர்களுக்காக இடைநிறுத்தம் செய்யப்பட்ட பப்ஜி கேம்!!

 தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக தகவல் கேமின் ஹோம் ஸ்கிரீனில் காண்பிக்கப்பட்டது. மேலும் இந்த இடைநிறுத்தம் இந்தியா, சீனா, ஹாங்காங், மக்காவோ மற்றும் தைவான் போன்ற அனைத்து நாடுகளிலும் இருந்துள்ளது.

இந்த தற்காலிக இடைநிறுத்தம் ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 12 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 15, 12 மணி வரை தொடர்ந்தது.

இதுகுறித்து பலரும் சோகத்தில் இருக்க, அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இது உலகளாவிய சேவையக பணிநிறுத்தம் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது இடைநிறுத்தம் செய்யப்பட்ட இந்த கேம் தற்போது “கேம் ஆஃப் பீஸ்” என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கொரோனா வைரஸால் உயிர் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க நிறுவனம் சேவையகங்களை தற்காலிக மூடியுள்ளனர்.

மேலும் உயிர் பலியானோர்களை நினைவு கூறும் வகையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

அதன்பின்னர் ஏப்ரல் 5 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் பப்ஜி கேம் இடைநிறுத்தம் முடிந்து பழைய நிலைக்குத் திரும்புகின்றனர்.

Related posts

ஒரு வருஷத்துக்குள்ள 25 கோடி டவுண்ட்லோடுகளைக் கடந்த கால் ஆஃப் டியூட்டி கேம்!!

TechNews Tamil

இந்தியாவில் புதிய வெர்ஷனுடன் மீண்டும் அறிமுகமாகவுள்ள பப்ஜி கேம்!!..

TechNews Tamil

அவென்ஜர்ஸ் எண்ட்கேமை கூகிள் பிளேவில் பதிவிறக்கம் செய்யலாம்.

TechNews Tamil