மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது சர்பேஸ் ஹப் 2எஸ்வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சர்பேஸ் ஹப் 2எஸ் மாடல் உடன் ஸ்டீல்கேஸ் ரோம் மொபைல் ஸ்டாண்டும் அறிமுகம் ஆகவுள்ளது.
இந்த சர்பேஸ் ஹப் 2எஸ் மாடல் ஆனது 50.5 இன்ச் 4கே மல்டி-டச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளேவினையும், டிஜிட்டல் வைட்போர்டு, மீட்டிங் தளம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

சர்பேஸ் ஹப் 2எஸ் மாடல் ஆனது 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இதன் முந்தய வெர்ஷனின் அடுத்த பதிப்பாக உள்ளது. இது பலவகையான மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
மேலும் இது விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆபீஸ் 365, மைக்ரோசாப்ட் வைட்போர்டு ஸ்கைப் ஃபார் பிஸ்னஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவை போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது சர்பேஸ் ஹப் 2 கேமரா, சர்பேஸ் ஹப் 2 பென் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இந்த சர்பேஸ் ஹப் 2எஸ் மாடலுடன் அறிமுகமாகும் ஸ்டீல்கேஸ் ரோம் மொபைல் ஸ்டாண்ட்டும் சிறப்பான வசதிகளையும், பயனர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.