Mobile

சாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

சாம்சங்கில் மான்சூன் சேல் என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன் என அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த ஆஃபர், வரும் 24ம் தேதி வரையில் இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி சீரிஸில் Galaxy M Series, Galaxy A Series ஆகியவற்றுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், கேலக்ஸி எம் 10 ஸ்மார்ட்போன் வாங்கலாம். 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி கொண்ட எம்10 போனின் விலை வெறும் 7990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சாம்சங் மான்சூன் சேலில் பொருட்களுக்கு அதிரடி விலை குறைப்பு!

இதன் அசல் விலை 9,290 ரூபாயாகும். இதே போல்,4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் எம் 30 ஸ்மார்ட்போன் 16,490 ரூபாயிலிருந்து 13,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

சாம்சங்கில் பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு, 32 இன்ச் சாதாரண எல்இடி டிவி 21,900 ரூபாயிலிரு்து 14,990 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் 28,900 ரூபாய் மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 20,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அசல் விலையிருந்து 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

சாம்சங் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஒவ்ன், ஏசி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு விற்பனையில் அதிகபட்சமாக 31 சதவீதம் வரையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அறிமுகமானது எல்.ஜி. நிறுவனத்தின் டபுள்யூ30 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகமாகும் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்: செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம்!!!

TechNews Tamil