கொரோனா வைரஸ் உலகின் சாதாரண நிலையினை புரட்டிப்போட்டுள்ளது. வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பெரும் பணக்காரர்கள் பொருளதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் சுந்தர் பிச்சை தனது ஆல்பாபெட் நிறுவனம் சார்பில் 800 மில்லியன் டாலர் சுகாதார அமைப்புகள், சிறிய வணிகங்கள் மற்றும் கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்தார்.

மேலும் இந்த வைரஸால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் 340 மில்லியன் மதிப்புள்ள இலவச விளம்பரங்களை ஆல்பாபெட் வழங்கி, சிறு வணிகர்களுக்கு உதவுவதாக அறிவித்தார்.
தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் கட்டமாக 15 நாட்களுக்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது சுந்தர் பிச்சை, இந்திய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட “கிவ் இந்தியா” பிரச்சாரத்திற்கு நேரடியாகக் ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
மேலும், சிறு வணிகங்களுக்கு உதவத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு 200 மில்லியன் டாலர் வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.