ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus New Year Sale என்ற தலைப்பில் தனது ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
- ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 128 ஜிபி கொண்ட வகையின் பழைய விலை- ரூ.37,999
- ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 128 ஜிபி கொண்ட வகையின் தற்போதைய விலை – ரூ.34,999
- ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 256 ஜிபி கொண்ட வகையின் பழைய விலை -ரூ.39,999
- ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் 256 ஜிபி கொண்ட வகையின் தற்போதைய விலை – ரூ.37,999

இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச்- Fluid AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு கொண்டுள்ளது.
மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் கொண்டதாகவும் அட்ரினோ 640ஜிபியு வசதியும் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை எல்இடி பிளாஸ், வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
அதேபோல் 3800எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.