சியோமி நிறுவனம் தனது
கான்செப்ட் போன் ஆன மி மிக்ஸ் ஆல்பா ஸ்மார்ட்போனுடன் சேர்த்து மி ஏர் டாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸினை அறிமுகம் செய்தது.
இந்த மி ஏர் டாட்ஸ் ப்ரோ 2 இயர்பட்ஸின் விலை ரூ .4,000 ஆகும். இது செப்டம்பர் 27 முதல் விற்பனைக்கு வர உள்ளது. பொதுவாக இயர்பட்ஸை பயன்படுத்துவதில் உள்ள சிக்கலில் பெரிய சிக்கல் அது காதுக்குள் இருந்து கீழே விழாமல் பாதுகாப்பதுதான் ஆகும்.
அதன்படி இந்த இயர்பட்ஸ் காதுக்குள் சரியாக பொருந்தி, விழாமல் இருக்கும்படியாக Semi-in-ear bud வடிவமைப்பை கொண்டதாக உள்ளது.

இது Bluetooth v5.0 மற்றும் LDHC Hi-Res audio codec போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.
சத்தம் மற்றும் டிராக் மாற்றம் போன்ற அனைத்தையும் டச் கண்ட்ரோல்கள் மூலம் செய்ய முடியும்.
இதன் பேட்டரியானது, 4 மணிநேர முழுமையான பிளேபேக்கை வழங்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங்கை கொண்டதாக உள்ளது.
இதில் உள்ள integrated infrared sensor பாதுகாப்பு அம்சமாக உள்ளது, பலரும்
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்..