ஏடிஎம் மூலம் நடக்கும் குற்ற சம்பவங்களைத் தடுக்க டெல்லி மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு சில நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது.
இரண்டு ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷனுக்கு இடையில் 6 முதல் 12 மணி நேரம் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், நமக்கு அடுத்தபடியாக வந்து எளிதில் ட்ராக் பண்ணி ட்ரான்ஸாக்ஷன் பண்ணுவது தடுக்கப்படும்.

மேலும் இந்தக் குழுவானது அதிக அளவிலான மோசடிகள் இரவு நேரங்களில் நடப்பதை உறுதி செய்தது.
மேலும் இந்தக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு நடவடிக்கையானது, ஏடிஎம்மில் இருந்து 10000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால் ஓடிபி முறை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த முறையில் நாம் பணத்தை எடுக்க முயல்கையில், நம்முடைய மொபைல் எண்ணுக்கு ஓடிபியானது அனுப்பி வைக்கப்படும். அதனைக் கொண்டு நாம் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். தற்போது கனரா வங்கி இந்த நடைமுறையை அமலாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.